வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (19:18 IST)

கேவலமான போஸ்ட்: நடிகையின் வருங்கால கணவரை ரோட்டில் இழுத்து போட்டு அடித்த மேனேஜர்!

நடிகை ராக்கி சாவந்தின் வருங்கால கணவரை பாடகர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் சாலையில் தாக்கி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடிகை ராக்கி சாவந்த் நகைச்சுவை நடிகர் தீபக் கலாலை திருமணம் செய்யப் போவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி  அறிவித்தார். 
 
இந்நிலையில், ராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக் கலாலை சாலையோரம் வைத்து கடுமையாக தாக்கி அதனை வீடியோவகவும் வெளியிட்டுள்ளார். 
 
தீபக் கலால் சமூக வலைதளங்களில் மோசமாக பதிவுகளை போடுவதாக கூறி அவரை நந்தால் அடித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நந்தாலுக்கு ஆன்லைனில் ஆதரவு கிடைத்துள்ளது என்பதுதான்.