வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (07:26 IST)

அரசு மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்! லேப் டெக்னீசியனுக்கு தர்ம அடி

சேலம்: ஓமலூர் மருத்துவமனையின், ரத்த பரிசோதனை மையத்தில், குழந்தைக்காக ரத்த பரிசோதனை செய்ய சென்ற தாயிடம்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லேப்  டெக்னீசியனுக்கு தர்ம அடி கிடைத்தது.


 
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு, பெண் ஒருவர், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில், ரத்த பரிசோதனை மையத்துக்கு, ரத்தம் கொடுக்கச் சென்றுள்ளார். 
 
அங்கு ஒப்பந்த லேப் டெக்னீசியனாக இருந்த சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த யோகநாத், குழந்தைக்கு ரத்தம் எடுக்க வேண்டும் எனக் கூறி, பெண்ணின் கணவரை வெளியே அனுப்பியுள்ளார்.
 
கணவர் சென்றுவிட்ட நிலையில், குழந்தைக்கு பரிசோதனை செய்த யோகநாத், குழந்தையின் தாயாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண் அலறிக் கொண்டு வெளியே ஓடிவந்ததை பார்த்த பொதுமக்கள், தகவலறிந்து லேப் டெக்னீசியன் யோகநாத்தை பிடித்து அடித்து உதைத்தனர்.
 
பின்னர், யோகநாத்தை, பணியில் இருந்த மருத்துவரிடம் ஒப்படைத்த பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
 
இதையடுத்து, தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சத்யா, லேப் டெக்னீசியன் யோகநாத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.