வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (11:14 IST)

பேட்ட பட வில்லன் மீது பாலிவுட் நடிகை பாலியல் புகார்

சூப்பர் ஸ்டாரோட காலா வில்லனைத் தொடர்ந்து, பேட்ட பட வில்லன் மீது மீடு புகார் கிளம்பி இருக்கிறது. 
முன்னாள் மிஸ் இந்தியா நிஹாரிக்கா சிங், பேட்ட வில்லன் நவாசுதின் மேலே மீடு புகார் சொல்லி இருக்காங்க. நவாசுதின், செக்ஸ்வல் ரிலேசன்ஷிப்புக்கு தன்னை ஃபோர்ஸ் பண்ணுணதா அவர் கூறியுள்ளார். நிஹாரிகாவின் வீடு அருகே நவாசுதினின் படத்தோட ஷூட்டிங் ஒரு முறை நடந்துச்சாம். அப்ப நிஹாரிகா, ஃபிரேக் பாஸ்டுக்கு நவாசுதின கூப்பிட்டு இருக்காங்க. உடனே நிஹாரிகாவின் வீட்டுக்கு நவாசுதின் போயிருக்காரு. அப்ப கதவை திறந்த உடனே  நவாசுதின், நிஹாரிகாவை இறுக்கமாக கட்டி பிடிச்சாராம். அப்ப இருந்து இருவருக்கும் இடையே ரிலேசன்ஷிப்பு ஸ்டார்ட் ஆயிடுச்சாம். இப்படியே பல நாள்  ரிலேசன்ஷிப் தொடர்ந்துச்சாம். 
 
கொஞ்ச காலத்துக்கு அப்புறம், நவாசுதினுக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கிறது தனக்கு தெரியவந்தது என நிஹாரிகா சொல்லியிருக்காங்க. இதற்கிடையில் நவாசுதினுடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் தனக்கு போன் போட்டு கண்டபடி திட்டியதாவும், அதன் பிறகு நவாசுதினுடன் தொடர்பை துண்டித்தாகவும் நிஹாரிகா சொல்லி இருக்காங்க. 
 
தன்னப்பத்தி அவரோட சுயசரிதையில் நவாசுதின்தப்பு தப்பா எழுதி இருந்ததாகவும், வதந்திகள பரப்பி தனக்கு பட வாய்ப்பு வராம செஞ்சதாகவும் நிஹாரிகா குற்றம் சாட்டி இருக்காங்க. இந்த புகாரல பாலிவுட்டில் மீண்டும் மீடு விவகாரம் புயலை கிளப்பி உள்ளது.