பிகினி உடையில் மிதக்கும் அனுஷ்கா சர்மா...! மனைவியின் அழகை ரசிக்கும் கோலி!
பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்ககளில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார்.
ஆனால், கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ஜீரோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யததால் தோல்வியை தழுவியது. அந்த படம் வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு புது படத்திலும் கம்மிட்டாகாமல் கணவர் விராத் கோலியுடன் ஜாலியாக சுற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவு அணிகளுடன் டி20, ஒரு நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு படையெடுக்க அவர்களின் அனுஷ்கா சர்மாவும் ஜாலி ட்ரிப் அடித்துள்ளார்.
அப்போது அங்குள்ள கடற்கரை ஒன்றில் பிகினி உடையணிந்து கடற்கரையோரத்தில் அமர்ந்து கூல் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா. இந்த புகைப்படம் வெறும் 12 மணிநேரத்தில் 2 மில்லியனுக்கு மேல் லைக்ஸ்களை குவித்து அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அனுஷாவின் ரசிகர்கள் பலரும் அவரது அழகை ரசித்து விதவிதமாய் கமெண்ட்ஸ்களை குவித்து வரும் நிலையில் அவரது கணவர் விராட் கோலியும் ஹார்டின் எமோஜியை பதிவிட்டு கமெண்ட்ஸ் செய்து அனுஷ்காவின் அழகை ஒரு ரசிகனை போலவே ரசித்துள்ளார்.