1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (10:09 IST)

இந்திய அணிக்கு சோதனை காலம்... ரவி சாஸ்திரி தேர்வால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடரோடு முடிவடைந்தது. 
 
அதன் பின்னர் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேற்று தலைமை பயிற்சியாளர் யார் என்ற தகவல் வெளியிடப்பட்டது. 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் மற்றும் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. 
 
அவரை அடுத்து மைக் ஹாசன், டாம் மூடி ஆகியோர்களும் பயிற்சியாளராக இருப்பார்கள் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்கள் எழுந்துள்ளது. 
 
ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக வரும் செப்டம்பர் மாதம் முதல் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி வரை நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது இந்த காலத்தை இந்திய அணியின் சோதனை காலம் என்றும், ரவி சாஸ்திரியை தேர்வு செய்த கபில்தேவ் மீதும் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.