1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (14:01 IST)

பிரபுதேவா படத்தில் நடித்த சன்னி லியோன்

சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற சன்னி லியோனின் ஆசையின் முதல் கதவு கோவாவில் திறந்திருக்கிறது.


 

 
ஜிஸம் 2 படத்தின் மூலம் இந்திப் படங்களில் கால் பதித்த நீலப்பட நடிகை சன்னி லியோன் இப்போது இந்தியாவின் செலிபிரிட்டிகளில் ஒருவர். அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து படத்தின் வியாபாரத்தை அதிகரிக்க அனைவருக்கும் ஆசை உள்ளது.
 
துரை தயாநிதி தனது வடகறி படத்தில் சன்னி லியோனை ஆடவைத்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார். இப்போது பிரபுதேவா.
 
கோவாவில் சிங் இஸ் பிளிங் படத்தை பிரபுதேவா இயக்கிக் கொண்டிருந்த போது வேறு விஷயமாக அங்கு வந்திருக்கிறார் சன்னி லியோன்.
 
உடனே அவருக்கு ஒரு கெஸ்ட் ரோல் தந்து நடிக்க வைத்திருக்கிறார். புதிய தொடக்கத்திற்கான முதல் அடி என்று இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.
 
சிங் இஸ் பிளிங்கில் கான்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.