வாகன உற்பத்தி சரிவால் பாதிக்கப்படும் இளம் தொழிலாளர்களின் குரல்: "அடுத்த மாதம் நிச்சயமில்லை"
எதிர்வரும் நாட்களில் தங்களின் பணி நிலைக்குமா என்று மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது பணி, நிரந்தர பணியாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.