செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (22:08 IST)

யுக்ரேன் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ரஷ்ய படையெடுப்பு பற்றிய முக்கிய தகவல்!

யுக்ரேனின் முன்னாள் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதி அருகே ஆக்கிரமிப்பாளர்கள் (ரஷ்ய படையினர்) நுழைந்து விட்டதாக யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
"பெலாரூஸ் பிராந்தியத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் செர்னோபில் மண்டலத்துக்குள் நுழைந்துள்ளனர்."
 
அபாயகர கதிரியக்க கழிவுகளின் சேமிப்புக்கலன்கள் கொண்ட அந்த நிலையத்தை தேசிய படையினர் பாதுகாத்து வருகின்றனர்.
 
அவர்கள் ஆக்கிரமிப்புப் படைகளுடன் மோதி வருவதாக யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த கதிரியக்க சேமிப்பு நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டால், அதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சு யுக்ரேன், பெலாரூஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படரும்," என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக அந்நாட்டில் உள்ள பிபிசி யுக்ரேனிய சேவை தெரிவித்துள்ளது.