திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (21:30 IST)

கஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் - ஏன் தெரியுமா?

கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் கஜகஸ்தான் அரசுக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, பயனர்களின் இணைய பயன்பாட்டை இடைமறிக்கும் கஜகஸ்தான் அரசின் செயல்பாட்டை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது.
என்ன நடந்தது?
 
கஜகஸ்தானில் இணைய சேவை அளிப்பவர்கள், தங்கள் சேவையை பயன்படுத்தும் மக்கள் அரசு அளிக்கும் மென்பொருள் ஒன்றை தங்கள் சாதனத்திலும், பிரவுசரிலும் நிறுவ கோரியது. இதனை அடுத்தே கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு இந்த மென்பொருள் இணைய பாதுகாப்புக்கு என்று கூறுகிறது. ஆனால், மக்களை கண்காணிக்கவே அரசு இப்படி செய்தவதாக கூகுள் கூறுகிறது.