திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:12 IST)

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: மழை பெய்தும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

கடந்த மாதம் வரை சென்னௌ உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில் தற்போது ஓரளவு மழை பெய்துள்ளதால் தண்ணீர் பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் மழை பெய்தும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர்ப்ப்பிரச்சனை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
 
தண்ணீர் லாரிகள் சிறைப்பிடிப்பு, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது போலீசார் பதிவு செய்யும் திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவது ஆகியவற்றைக்  கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக ஏற்கனவே தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் அவர்கள் அறிவித்துள்ளபடி இன்றுமுதல் அந்த வேலைநிறுத்தம் தொடங்குகிறது
 
தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என திட்டவட்டமாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் அதுவரை தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது