திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:07 IST)

சீனாவில் மன்னிப்பு கேட்ட மாட்டிறைச்சி உணவகம்!

மத்திய சீனாவில் உள்ள சாங்சா நகரில் அமைந்திருக்கும் மாட்டிறைச்சி உணவகம் ஒன்று தங்கள் வாடிக்கையாளர்கள் உணவுகளை ஆர்டர் செய்யும் முன்பு தங்களின் உடல் எடையை அளவிடுமாரு அறிவுறுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.
 
சீனாவில் தேசிய அளவில் உணவை வீணாக்குவது எதிரான பிரசாரம் தொடங்கப்பட்ட பின்பு அந்த உணவகத்தின் நுழைவாயிலில் உடல் எடையை பரிசோதிக்கும் இரு கருவிகள் நிறுவப்பட்டன. உடல் எடையை அளவிட்ட பின்பு அங்கு இருந்த செயலியில் அவர்களின் உடல் எடை குறித்த விவரங்கள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
 
அந்தந்த நபர்களின் உடல் எடைக்கு ஏற்ற உணவுகளை, அந்த செயலி பரிந்துரைக்கும். உணவை வீணாக்காமல் தங்களுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் உண்பதை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது.
 
எனினும், இவ்வாறு வாடிக்கையாளர்களை அவமானப்படுத்தும் வகையிலான செயலை மேற்கொள்வதாக சீன சமூக ஊடகங்களில் இந்நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த உணவகத்துக்கு எதிராக சுமார் மூன்று கோடி ஹேஷ்டேகுகள் சீன சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. இதன்பின்பு அந்த உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.