செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (07:24 IST)

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்: ஒரே நாளில் 63,986 பேர் பாதிப்பு!

உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை முந்திய இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உலகளவில் கொரோனா 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பாதித்தோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் 2,589,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், இதுவரை 50,084 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர் என்பதும், கொரோனாவில் இருந்து 1,860,672 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
அமெரிக்காவில் 5,529,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53, 523 என்பதும், அந்நாட்டில்172,606 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசிலில் 3,317,832 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இங்கு நேற்று ஒரே நாளில் 38,937 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், இந்நாட்டில் இதுவரை 107,297 பேர் பலியாகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ரஷ்யாவில் 9.17 லட்சம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5.83 லட்சம் பேரும், பெருவில் 5.16 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 5.11 லட்சம் பேரும், கொலம்பியாவில் 4.56 லட்சம் பேரும், சிலியில் 3.83 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.58 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.