ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:32 IST)

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: நிம்மதி தந்த மழை, ஆனால் பெருந்தீ பரவும் அபாயம்!

கடந்த சில மாதங்களாக காட்டுத்தீயினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஆஸ்திரேலியாவில் தற்போது மழை பெய்துள்ளதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சிட்னியில் இருந்து மெல்பர்ன் வரை மிதமான மழையும், நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளது.
 
ஆனால், வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
அதுமட்டுமல்லாது, விக்டோரியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ ஒன்றாக சேர்ந்து பெருந்தீயாக உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மழை பெய்து சற்று வெப்பம் தணிந்துள்ள போதிலும், காற்று மாசு அபாயகர நிலையில்தான் உள்ளது.