செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (12:22 IST)

ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ்... IND vs SL மேச்சுக்கு கைக்கொடுக்காத லைஃப் ஹேக்ஸ்!!

மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற திட்டமிட்டு,  போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
 
இதனை அடுத்து போட்டி ஆரம்பிக்க தயாரான நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மழை நின்ற பிறகு ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்கி போட்டியை நடத்த திட்டமிட்டனர். 
ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க ஹேர் ட்ரையர், வேக்கம் க்ளீனர், அயர்ன் பாக்ஸ், சூப்பர் சக்கர் என பலவற்றை பயன்படுத்தினர். ஆனால் இவை அனைத்தும் பலனளிக்காததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
 
ஆனால் பிச்சின் ஈரத்தன்மையை போக்க ஹேர் ட்ரையர், வேக்கம் க்ளீனர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.