புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (12:04 IST)

டிக்டாக் குறித்த எங்கள் நிலையில் மாற்றமில்லை - அமேசான்

அமேசான் நிறுவன பணியாளர்கள் தங்களது திறன்பேசியிலிருந்து காணொளி பகிர்வு செயலியான டிக்டாக்கை அகற்றுமாறு அந்த நிறுவனத்தின் தரப்பில் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையில், அது தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.
 
டிக்டாக் செயலியில் “பாதுகாப்பு சர்ந்த பிரச்சனைகள்” இருப்பதாக கூறி நேற்று (ஜூன் 10) தனது நிறுவன பணியாளர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் ஒன்று அமேசான் நிர்வாகத்தால் அனுப்பப்பட்டிருந்தது.
 
குறைந்த காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனபட்டாளர்களை பெற்ற டிக்டாக் செயலி சீனாவை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால் அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன அரசுடன் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
 
குறிப்பாக, சமீபத்தில் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை காரணம் காட்டி, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடைவித்திருந்தது. இந்த நிலையில், அமேசான் இதுகுறித்த மின்னஞ்சல் அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், மேலும் அந்த நிறுவனம் எழுப்பியுள்ள கவலையை தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் டிக்டாக் கருத்துத் தெரிவித்துள்ளது.
"எங்கள் பணியாளர்களில் சிலருக்கு இன்று காலை (வெள்ளிக்கிழமை) மின்னஞ்சல் ஒன்று பிழையாக அனுப்பப்பட்டது. டிக்டாக் தொடர்பாக எங்கள் கொள்கைகளில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை," என்று அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
முன்னதாக, இதுதொடர்பாக அமேசான் தனது பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் டிக்டாக் செயலியை கண்டிப்பாக திறன்பேசியில் இருந்து அகற்ற வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
 
“பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக இனி அமேசான் நிறுவனத்தின் மின்னஞ்சல் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“உங்களது திறன்பேசியில் டிக்டாக் செயலி இருந்தால், அதை கண்டிப்பாக ஜூலை 10ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும். இல்லையெனில் அந்த திறன்பேசியில் அமேசானின் மின்னஞ்சலை பயன்படுத்த முடியாது.