தனுசு - மார்கழி மாத பலன்கள்

Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (12:34 IST)

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், சனி  - தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய  வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரய ஸ்தானத்தில்  குரு, புதன்  ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
அதிக உழைப்பு இல்லாமல் திறமையை கொண்டே முன்னேறும் தனுசு ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து  முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
 
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால் உடலில் சிறிது சோர்வு ஏற்படும் என்பதால் சுறுசுறுப்பு குறையும். 
 
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்து வந்த  போட்டிகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச்  செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நலம் தரும் திருப்பங்கள் ஏற்படும். 
 
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் முடிவைக் காண்பீர்கள். சமூகத்தில் புதிய  அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப் பிறகு சிறப்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர்  மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் கடமையை சரியாக நிறைவேற்றுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 
 
பெண்மணிகளுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவருடன்  ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். 
 
மாணவமணிகள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.
 
மூலம்:
 
இந்த மாதம் எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர்.  நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்   செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. 
 
பூராடம்:
 
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு  முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள்  நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.  புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். 
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு  தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். 
 
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் எழுந்தருயிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடவும். அவருடைய அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றியே  கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
சந்திராஷ்டம தினம்: டிசம்பர் 25, 26 
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 16, 17.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :