புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (17:42 IST)

அக்டோபர் மாத ராசிபலன்கள்: துலாம்

நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே,


இந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும்.  

குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

தொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும்.  தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.

கலைஞர்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.

அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

சுவாதி:
இந்த மாதம் இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.

பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலமான பலன்கள் பெற்று புகழான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28