செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (17:33 IST)

அக்டோபர் மாத ராசிபலன்கள்: சிம்மம்

தன்னலத்தில் கொஞ்சமும், பிறர்நலத்தில் அதிக கவனமும் செலுத்தி புண்ணியங்கள் பெறும் சிம்ம ராசி அன்பர்களே,


இந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும்.  

குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி  தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.  

உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிகழ்வை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள்.

கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

பூரம்:
இந்த மாதம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.

பரிகாரம்: பால வடிவ முருகனை வழிபாடு செய்வதால் குழந்தையைப் போல மன அமைதி நிறைந்த வாழ்க்கை உண்டாகும். சிவப்பு நிற மலர்களை முருகனுக்கு சாற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24