திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

மேஷம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்): தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷராசி நேயர்களே! இந்த மாதம் தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெறமுடியும்.
 
உத்தியோகஸ்தர்களும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும்.
 
பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது.
 
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்தகால மந்தநிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுவழியில் ஆதரவுகள் உண்டாகும்.
 
அசுபதி: இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.
 
பரணி: இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
 
கார்த்திகை - 1: இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
 
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Nov 2, 3
 
சந்திராஷ்டம தினங்கள்: Nov 9, 10.