திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:38 IST)

மீனம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில்  இருந்த சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர்  11ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கப் பெறும் மீன ராசி அன்பர்களே! இந்த மாதம்  தொழில் வியாபாரம் தொடர்பான  பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன  நிம்மதி அடைவார்கள்.
 
குடும்பஸ்தானத்தை குரு, புதன் மற்றும் சுக்ரன் என சுபர்களின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் படிப்பிற்காக செலவு செய்வார்கள். அதற்கேற்றார் போல் பிள்ளைகளும் நன்றாக படிப்பார்கள். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். எனினும் ஒருவருக்கொருவர்  விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும்.
 
தொழில் ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் செய்வதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது பகவான் சஞ்சாரம் செய்வதும் தாமதமான நல்ல பலன்கள் தருமேயன்றி நஷ்டம் இல்லை. எனவே தாமததிற்காக யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பொறுமையைக் கடைபிடியுங்கள்.
 
உத்யோகஸ்தர்கள் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான நற்பலன்களையும் பெறுவீர்கள்.  கவலை வேண்டாம்.
 
மாணவர்கள் வெளியில் செல்லும் போது கவனம் தேவை. தேவையில்லாத இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் நலம். கலைத்துறையினருக்கு நீங்கள்  அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள்  வாங்கலாம்.
 
அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.
 
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
 
உத்திரட்டாதி: இந்த மாதம் பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள்  உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
 
ரேவதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்  கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.
 
பரிகாரம்: நாக தெய்வங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட திருமணத் தடை நீங்கும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9.
 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.