வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (06:00 IST)

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (15-12-2023)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். பொதுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்
இன்று புத்திரவழியில் வீண்கவலைகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும். கடன் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் வாதிகள் முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும்.  புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச்செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்
இன்று கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி
இன்று உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். மாணவ- மாணவியர் கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். படிப்பில் கவனம் குறைவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்
இன்று தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே மாற்றியமைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்
இன்று எதிலும் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. தனவரவுகள் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு
இன்று தொழில்ரீதியாக சில போட்டிகளைச் சந்திக்கநேரிடும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்
இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். உடல்நிலையிலும் தேவையற்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு ஏற்படும். புத்திரவழியில் வீண்செலவுகள் உண்டாகி மனநிம்மதி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்
இன்று எந்தவொரு காரியத்தைச் செய்வது என்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்
இன்று எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி ஒற்றுமை குறையும். மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்துவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9