புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-10-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 

ரிஷபம்
இன்று புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பெரியவர்கள்  சொல்படி கேட்டு நடப்பது வெற்றி பெற உதவும். அலைச்சல் ஏற்படலாம். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரனின்  சஞ்சாரத்தால்  அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்
இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த இடைவெளி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்
இன்று திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 

சிம்மம்
இன்று வாழ்வில்  சுபிட்சம் ஏற்படும். கோர்ட் வழக்கு காரியங்களில்  தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசிநாதனின் 5மிட சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 

கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்
இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த வேலைகளை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

விருச்சிகம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 

தனுசு
இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.  வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 

மகரம்
இன்று உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 

கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 

மீனம்
இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ஆனாலும் சந்திரனின் சஞ்சாரத்தால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9