வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-03-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 2, 5, 7

ரிஷபம்:
இன்று குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9

மிதுனம்:
இன்று மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

கடகம்:
இன்று உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 5, 9

சிம்மம்:
இன்று மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட நிறம்: 1, 4, 6

கன்னி:
இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை. செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 1, 6, 9

துலாம்:
இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது. சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றியடைவதுடன் பணவரத்தும் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 7

விருச்சிகம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

தனுசு:
இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 5

மகரம்:
இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

கும்பம்:
இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5, 9

மீனம்:
இன்று நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். ஒருசிலர் அரசுப்பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9