Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இளம்பெண்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (13:26 IST)
இங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 
இங்கிலாந்து ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு ஜன்னல் வழியாக வீட்டிற்கு வெளியே வீசியுள்ளார். 
 
இதில் அந்த குழந்தை இறந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவரது கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், இதனால் தனக்கு குழந்தை தேவையில்ல என முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கை விசாரித்த ஸ்டாப்போர்டு கிரவுன் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பெற்றெடுத்த குழந்தையை பிறந்தவுடன் சாலையில் வீசும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :