1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (14:02 IST)

தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

Afghanistan
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத் என்பவர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு நடந்து வரும் நிலையில் அங்கு பெண்களுக்கு ஒவ்வொரு உரிமையாக பறிபோய் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெண்கள் கல்லூரிகளில் சென்று படிக்க கூடாது என்றும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது என்றும் புதுப்புது சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் முகமது காலெத் என்பவர் கூறியுள்ளார். 
 
பெண்கள் சுற்றுலா தளங்களை காண்பது தேவையற்ற ஒன்று என்றும் இது போன்ற இடங்களுக்கு பெண்கள் வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிந்து வருவதில்லை என்றும் எனவே பெண்களை பூங்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran