தொழிலை கற்க மகனை பணயமாக்கிய கொடூர தாய்

Last Updated: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (12:24 IST)
நர்ஸாக பணியாற்றி வந்த தாய் ஒருவர் தனது தொழிலில் பயிற்சி அடைய மகனை பலிகடாய் ஆக்கிய சம்பவம் டென்மார்க்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
டென்மார்க்கை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 36 வயது பெண் ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். தனது நர்ஸ் தொழிலில் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லிட்டர் ரத்தம் எடுத்துள்ளார்.
 
தனது மகன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அதாவது 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தார். 
 
இதனால் இப்போது அந்த சிறுவன் குடல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான். இது குறித்து வெளியுலகிற்கு தெரிய வரவும், அந்த பெண் மீது வழக்கு பதியப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், இனி நர்சாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் கொடூரம் என்னவெனில் மகனின் உடலில் இருந்து வார வாரம் எடுத்த ½ லிட்டர் ரத்தத்தை கழிவறையில் கொட்டி விடுவேன் என விசாரணையின் போது தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :