திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (18:37 IST)

உடனடியாக எபி+ குரூப் ரத்தம் தேவை! அவசர தகவலை பகிர்ந்த பிக் பாஸ் பிரபலம்!

மாடல் அழகியும் பிக் பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன் தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடனடியாக AB + குரூப் ரத்தம் தேவை என அவசர தகவலை பகிர்ந்துள்ளார். 


 
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பேசப்பட்டவர் ரைசா தான். பெங்களூரை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சினிமா உலகில் பரீட்சியமானார். 
 
பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஹாரிஸ் கல்யாணுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் பிறகு அவருடன் சேர்ந்து  ‘பியார் பிரேமா காதல்’ என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு தற்போது ஆலிஸ் என்ற படத்தில்  ஜிவி பிரகாஷுடன் நடித்து வருகிறார்.  
 
இந்நிலையில்  தற்போது நடிகை ரைசா தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அவசரமாக AB + குரூப் ரத்தம் தேவை என  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த தகவலை முடிந்த அளவிற்கு ஷேர் செய்யுங்கள் என்று தெரிவித்த அவர் அதற்கான முகவரி மற்றும் தொடர்புகொள்ளவேண்டிய எண்ணையும் பதிவிட்டுள்ளார்.


 
உங்களில் யாரேனும் AB + குரூப் ரத்தம் உடையவராக இருந்தால் உடனடியாக உதவுங்கள்.