1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:19 IST)

உலகம் முழுவதும் 70 கோடி பேருக்கு கொரோனாவா? – உலக சுகாதர அமைப்பு அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 கோடிக்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் 70 கோடிக்கும் மேல் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கோடி கணக்கில் அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை பல லட்சங்களாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரிவு தலைவர் மைக்கெல் பிரையன் பேசியபோது “நாளுக்கு நாள் கொரோனா தொற்று விரிவடையும். எனினும் அவற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வழிமுறைகள் உள்ளன. இதுவரை பலர் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் (சுமார் 70 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். முக்கியமாக தெற்காசியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.