1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:18 IST)

முன்பைவிட நன்றாக இருக்கின்றேன்: டிஸ்சார்ஜ் ஆன டிரம்ப் டுவீட்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் திடீரென அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது 
 
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா நோயிலிருந்து பூரண குணம் ஆகி விட்டதாகவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதுகுறித்து அமெரிக்க அதிபர் தனது ட்விட்டரில் ’நான் தற்போது நலமாக இருக்கிறேன். கொரோனா பாதிப்புக்கு பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேனோ, அதை விட தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்
 
மேலும் பொதுமக்கள் கொரோனா நோய் பாதிப்பால் அச்சப்பட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கருத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது