வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (17:34 IST)

ஜான் உடல் எங்கே..? சென்டினல் தீவில் நீடிக்கும் மர்மம் !

நேற்றுக்கு முந்தைய தினம் அந்தமான் நிகோபார்  போலிஸார் செண்டினல் தீவில் மறைந்த கிருஸ்தவ போதகர் ஜானின் உடலை தேரும் பணியில் துரிதமாக இறங்கினர். ஆனால் ஜான் ஒரு கிருஸ்தவ மத பிரசங்கி எனபதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என போலீஸார்  தெரிவித்துள்ளனர். ஆனால் கான்சாஸை சார்ந்த கிருஸ்துவ மிஸ்னரி இயக்கமானது ஜான் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ஊழியம் செய்து வந்ததாகவும் சேர் த கோஸ்பெல் என்ற இயக்கத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் ஜான் சென்டினல் தீவுக்கு வந்து ரத்த சாட்சியாக மரணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளின் காவல் ஆணையரான தீபக் பதக் இது குறித்து கூறியுள்ளதாவது:
 
மிஷினரி ஹோம் அஃபேர்ஸ் என்ற மிஷினரி இயக்கத்துக்கு கடந்த 22 ஆம் தேதி ஜான் இறந்த செய்தி கிடைத்துள்ளது. ஆனால் 16 ஆம் தேதியே வாக்கு சென்டினல் தீவில்  ஜான் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் யாரும் செல்லக்கூடாது என்ற அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்ட  பகுதிக்கு சென்றதாலேயே வெளியுலக தொடர்பு அற்று காட்டில் ஒதுங்கி இருக்கும் பூர்விக சென்டினல்  தீவு மக்களால் கொல்லப்பட்டிருக்கிறார். அந்த தீவு மக்கள் வெளிமக்களை  தம் பகுதிக்கு உள்ளே வர விடாமல் கடுமையாக  எதிர்ப்பவர்கள். இதுதான் ஜான் கொல்லப்பட முக்கிய காரணம்.
 
இதுபற்றி  ஹோம் மிஷனரி இயக்கம் கூறியுள்ளதாவது:
 
ஜான்  ஒரு கலாசார பிரியர் . அதனால் ஊழியம் சம்பந்தமாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லுவார். இதற்கு முன்னம் ஈராக், குர்திஸ்தான், தென் ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். இவர் எங்கள் இயக்கத்தில் சேர்ந்த பிறகு  கான்சா நகரில் பயிற்சிக்காக சென்றார். ஓரல் ராபர்ட்ஸ் யுனிவர் சிட்டியில் பட்டப் படிப்பு முடித்துள்ளார்.அப்போதுதான் ஜான் இந்த செண்டினல் தீவுக்கு செல்லவேண்டும் எனபதில் மிகவும் உறுதியாக இருந்தார்.இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இதெல்லாவற்றையும் முக்கிய ஆதாரங்களாக சேகரித்துக் கொண்ட அந்தமான் நிகோபார் போலீஸ் ஜானின் உடலைக்கண்டுபிடிக்க போதுமான தடயங்கள் கிடைக்கவில்லை என கூறிவருகிறார்கள்.இருப்பினும் ஜானி  பேஸ்புக் மற்றும் சமூக வலதளம் போன்றவற்றில் அவர் பதிவிட்டுள்ளவற்றை எல்லாம் குறிப்பெடுத்து மேலும் துரிதமாக அவருடைய வழியிலேயே விசாரித்துவருகிறார்கள்.
 
எது எப்படியோ இறந்த ஜானில் ஆன்மா சாந்தியடையவும் அவரது லட்சியங்கள் அவர் செய்ய முயன்ற காரியங்கள் வேறு ஒரு ஆரோக்கியமான வழியில் சீக்கிரமே நடைபெற அனைத்து மிஷனரி இயக்கங்களும்  ஜானுக்காக ஜெபித்துவருகிறார்கள்.