திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (17:27 IST)

டிசம்பர் மாத ராசிபலன்கள்: துலாம்

டிசம்பர் மாத ராசிபலன்கள் - துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
 
எவரையும் தமது திறமையால் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை  உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள்  செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். 
 
தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும்.  முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல்  அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி  வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். 
 
வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.  தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. 
 
பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற  உதவும். 
 
அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
 
சித்திரை 3, 4 பாதங்கள்: 
இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
 
சுவாதி:
இந்த மாதம்  குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம்  அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன் - வெள்ளி; தேய்பிறை: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12