ஐபோன்களில் இனி வாட்ஸ் அப் சேவை கிடையாது: அதிரடி அறிவிப்பு!
ஐபோன்களில் இனி வாட்ஸ் அப் சேவை கிடையாது: அதிரடி அறிவிப்பு!
ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை கிடையாது என வாட்ஸ்அப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் முதல் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது
அதேபோல ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது
இதனால் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை வாட்ஸ்அப் நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐபோன் உபயோகிக்கும் பயனாளர்களுக்கும் வாட்ஸ்அப் சேவை தொடரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஐ போன் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.