ஓரே மாதத்தில் 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்!
ஒரே மாதத்தில் 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கடந்த ஜூலை மாதம் மட்டும் 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் நிர்வாகம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதிய தகவல் கொள்கை அடிப்படையில் விதிகளை மீறியதாக 24 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
ஒரே நாளில் 20 லட்சம் இந்தியர்கள் நீக்கப்பட்ட தகவல் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.