1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:42 IST)

அமெரிக்காவில் தண்ணீர் பற்றாக்குறை - 40 மில்லியன் மக்கள் தவிப்பு!

அமெரிக்காவின் சில மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. 

 
அமெரிக்காவில் சில மாகாணங்களில் முதன்முறையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. ஆம், அரிசோனா, நெவடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழக்கமாக வழங்கப்படும் நீரில் 18 விழுக்காடு வரை பற்றாக்குறை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கொலராடோ ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரி வரலாறு காணாத அளவிற்கு வறண்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பற்றக்குறையால் ஏறத்தாழ 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது என தகவல்.