திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (16:38 IST)

மூன்றாவது தவணை தடுப்பூசி போட அமெரிக்கா முடிவு?

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியுள்ளதால் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா முதல் அலை பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டௌ உயிரிழந்தனர். ஆனால் அதன் பின் சுதாரித்த அமெரிக்கா தடுப்பூசி போட்டு பரவலைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில் இப்போது அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனால் ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை போடவேண்டுமென மருத்துவர் குழு பரிந்துரைக்க உள்ளதாம்.