வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (15:49 IST)

அமெரிக்க கெடுபிடி: பாதாளத்தில் சரிந்த ஈரான் நாணய மதிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் இருந்த ஒபாமா ஈரான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் போடப்பட்டது.
 
இதன் பின்னர் ஆட்சி மாறி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனை தொடர்ந்து ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. 
 
அதோடு உலக நாடுகள் ஈரானுடன் உறவுகளை துண்டித்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கயுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
தற்போது வரை விதக்கப்பட்டுள்ள தடைகளால் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. 
 
அமெரிக்காவின் தடைகளால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து, பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் உள்ளாகியுள்ளது. 
 
ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெ விற்பனைக்கும் அமெரிக்கா செக் வைத்துள்ளதால், ஈரானில் கச்சா எண்ணெய் 40 சதவீதம் முடங்கியுள்ளது.