வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (12:15 IST)

இந்தியான்னா விட்டுரூவோமா? பாயும் அமெரிக்கா...

இந்தியா ரஷ்யாவிற்கு இடையே ஆயுத கொள்முதலுக்காக ரூ.31,500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க கூடும்.  
 
ஆனால், இதுகுறித்து அமெரிக்க உதவி ராணுவ மந்திரி கூறியது பின்வருமாறு, இந்தியா ரஷியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கலாம் என கூறப்பட்டது. 
 
ஆனால், இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டத்தின் (சிஏஏடிஎஸ்ஏ) கீழ் ரஷ்யாவுக்கு சமீபத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. 
 
இதன்படி, ரஷ்யாவுடன் எந்த நாடும் ராணுவ தளவாடங்களை வாங்க முடியாது. சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் எந்த ஒரு தனி நாட்டுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 
 
பொருளாதார தடைக்கு வாய்ப்புள்ள ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான உதவிகள் செய்வோம். ஆனால் தடை போடமுடியாது என தற்போது தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.