வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:17 IST)

அமெரிக்காவில் மளிகைக் கடையில் திடீர் மனிதன்! – துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாகிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துள்ள நிலையில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிசூடு சம்பவங்களும், இதனால் பொதுமக்கள் பலியாகும் சோகங்களும் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் இருவருக்கு இடையேயான துப்பாக்கிசூட்டில் 8 வயது சிறுமி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மளிகை கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.