செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (07:56 IST)

உக்ரைன் அதிபர் சென்ற கார் விபத்து: அதிபருக்கு என்ன ஆச்சு?

Ukrain
உக்ரைன் அதிபர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானதை எடுத்து அதிபருக்கு இலேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் அந்நாட்டின் பல பகுதிகள் சிதிலம் அடைந்துள்ளன, இருப்பினும் வல்லரசு நாடான ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் அதிபர் தனது படைகளை வைத்து சமாளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அதிபருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உக்ரைன் அதிபர் மீது மோதிய கார் டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் அதிபர் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த செய்திக அந்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.