செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:05 IST)

ரஷிய வீரர்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே 6 மாதங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து வருகிறது. இரு நாட்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தபின்னும் முடிவு எட்டப்படாததால் இரு  நாட்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பலியாகினர்.

இந்த நிலையில், உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் இரண்டு ரஷிய வீரரர்கள் செல்லும்போது, ஒரு ட்ரோன் அவர்கள் அருகில் வெடிகுண்டு வீச, அதில் ஒரு தப்பிச் சென்றார்.இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலை நீடித்தால் இரு நாடுகளிடையே மேலும் உயிர்பாதிப்புகள் அதிகரிக்கலாம்  பல நாடுகளும் என விமர்சித்து வருகின்றனர்.