திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (15:32 IST)

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை! பீதியில் அலறி அடித்து ஓடிய மக்கள் ..!

இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கலாம் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மரண பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.


 
இந்தோனேசியாவில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 1500 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துவிட்டதைப்போல தெரிகிறது. ஆனால் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அந்த நாட்டு மக்கள் இன்னும் மீளவில்லை. கடற்கரையோரம் அதிக அளவில்  பாதிப்பு ஏற்பட்டதால், அந்தப் பகுதிகளைச் சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
 
இந்நிலையில் இந்தோனேசியா வானிலை, புவியியல் மற்றும் பருவநிலையியல் அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. சுனாமி தாக்கம் அதிகம் இருந்த சண்டா ஸ்டெரெயிட் கடற்கரை பகுதியிலிருந்து குறைந்தபட்சம் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்குமாறு அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.


 
அனாக் கரஹோட்டா மலையில் தொடர் எரிமலை வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் கடலில் உயரமான அலைகள் எழக்கூடும். பெரும் மழையும் பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பீதி கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 
வானிலை புவியியல் துறையின் இந்த எச்சரிக்கையால், இந்தோனேசியாவில் சுனாமி பீதி அதிகரித்துள்ளது. கடற்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கார்களில் கூட்டமாக சென்றவண்ணம் உள்ளனர். இதுவரை சுமார் 21 ஆயிரம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது .