புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:31 IST)

அல்-ஜவாஹிரி கொலை: மார்தட்டிக்கொண்ட பைடன்; மறுக்கும் தலிபான்!

அல்-ஜவாஹிரி மீதான அமெரிக்காவின் தாக்குதலை தலிபான் அரசு மறுத்துள்ளது.

அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அறிவித்தது கடந்த வாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அல்கொய்தா தலைவராக பின்லேடன் இருந்தபோது தான் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட என்பதும் அதன் பின்னர் குறிவைத்து அமெரிக்க ராணுவம் பின்லேடனை கொன்றது என்பது தெரிந்ததே.

இதனைத்தொடர்ந்து அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி என்பவர் இருந்து வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார். அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி.

இந்நிலையில் காபூலில் அவரது மரணம், அவர் தலிபான்களிடமிருந்து அடைக்கலம் பெற்றாரா என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், காபூலில் ஜவாஹிரியின் இருப்பையோ அல்லது மரணத்தையோ இன்னும் ஆஃப்கானிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. அதாவது அல்-ஜவாஹிரி மீதான அமெரிக்காவின் தாக்குதலை தலிபான் அரசு மறுத்துள்ளதாகவே தெரிகிறது.

மேலும் தலிபான்கள் தரப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது அமெரிக்கா தெரிவித்துள்ளபடி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த செய்தியை பற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறிய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என   குறிப்பிடப்பட்டுள்ளது.