வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:43 IST)

நிலக்கரி சுரங்க கம்பெனியில் பயங்கர தீ விபத்து... 19 பேர் பலி

Fire
சீனாவில்  அதிபர் ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹாஞ்சி மாகாணத்தில் தனியார் நிலக்கரி சுரங்க கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 19 பேர் பலியாகினர்.

சீனாவின் ஷான்ஜி மாகாணம் லியூலியாங் என்ற  நகரில் தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகம் இயங்கி வருகிறது.

5 மாடிகள் கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில்  ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென்று 2 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால், ஊழியர்கள் ஓடி தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் ஒரு சிலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர்.  ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு, தீயை அணைத்தனர். இவ்விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தககவல் வெளியாகிறது.இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.