1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (19:35 IST)

பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிப்பு

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும்  உள்ள நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது.

இத்தொற்றினால் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா ஊசி, மருத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சில மாதங்களாக கொரொனா தொற்று குறைந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று கோவை பாஜக எம்.எல்.ஏவும், தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.