பெரு நாட்டில் திடீர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு!
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 36 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் பெருவின் தெற்கு பகுதியில் உள்ள அரேகிபாவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவிலிருந்து தப்பிக்க சிலர் வேனில் ஏறி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் வேன் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K