செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (08:17 IST)

பரியேறும் பெருமாள்' படத்தில் நெல்லை தங்கராஜ் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

nellai thangaraj
பரியேறும் பெருமாள்' படத்தில் நெல்லை தங்கராஜ் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் காலமானார். 
 
நாட்டுப்புற கலைஞரான நெல்லை தங்கராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி பல தெருக்கூத்துக்களை நடத்தி உள்ளார் என்பதும் அவரது திறமைக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தங்கராஜின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அவருக்கு புதிய வீடு கட்டி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நெல்லை தங்கராஜ் உடல் நல குறைவு காரணமாக சற்று முன்னர் காலமானார். இதனை அடுத்து திரையுலகினார் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva