சாலை முழுவதும் பிணங்கள்; சோகத்தில் முடிந்த ஹாலோவீன்! – தென்கொரியாவில் சோகம்!
தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் குளிர்கால தொடக்கத்தில் கொண்டாடப்படும் ஹாலோவீன் தினம் பிரபலமாக உள்ளது. இந்த நாளில் அமானுஷ்ய உருவங்கள் போல மக்கள் வேடமிட்டு கொண்டாடுவது வழக்கம். தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஹாலோவீன் கொண்டாட கட்டுப்பாடுகள் இருந்தது.
இந்த முறை ஹாலோவீன் கொண்டாட கட்டுப்பாடுகள் அற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தென்கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். அப்போது ஒரு குறுகிய தெருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தென்கொரியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edited By Prasanth.K