1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (22:31 IST)

உகாண்டாவில் பரவிவரும் எபோலா வைரஸ் - இதுவரை 30 பேர் உயிரிழப்பு!

ebola
உகாண்டா   நாட்டில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் தற்போது இதன் பரவல் விகிதம்  ஓரளவு குறைந்துள்ளது.

இந்த  நிலையில்,  கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா  வைரஸ் பரவி வருகிறது.   இதுவரை சுமார் 109 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ்பாதிப்பால்  30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த எபோலா வைரஸ் தொற்றைக் குறைக்க உகாண்ட நாட்டு அரசு கூடுதல் சிகிச்சை மையங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில், அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவெனில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 15 பேர் சுகாதார ஊழியர்கள் என்பது குறிப்பிடதிதக்கது.