வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 மார்ச் 2018 (20:42 IST)

பாம்புகளின் காதலன் பாம்பு கடித்து மரணம்...

பாம்புகளை லாவமாக பிடிப்பது, அவற்றுடன் கொஞ்சி விளையாடுவது, முத்தமிடுவது என மக்களிடையே மிகவும் பிரபலமான கோலாலம்பூரை சேர்ந்த தீயணைப்புத்துறை வீரர் அபு பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கோலாலம்பூரில் வசித்து வரும் 33 வயதான அப் ஜாரின் ஹூசைன், பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பிடிப்பதோடு மட்டுமில்லாமல், பாம்பிற்கு முத்தமிடுவது, அவற்றுடன் சகஜமாக பழகுவது, அவற்றுடனே தூங்குவது என அசாத்திய செயல்களை செய்வதில் வல்லவர். எவ்வளவு கொடிய விஷ பாம்பாக இருந்தாலும், லாவகமாக பிடித்து அதை உயிரியல் பூங்காவில் கொண்டு விடும் பணியை அவர் செய்து வந்தார்.பாம்புகளுடன் இவர் விளையாடும் வீடியோ யூடியூப்பில் மிகவும் பிரபலமாகும். இவரின் வீட்டிலும் பாம்புகளை சர்வ சாதரணமாக உலவும். 
 
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு கொடிய விஷம் உள்ள ராஜ நாகம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அதை பிடிக்க அபு முயற்சித்த போது அந்த பாம்பு அவரை கடித்தது. அதனால், அவருக்கு உடல் முழுக்க விஷம் ஏறியது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

 
ராஜ நாக பாம்புகளுடன் கொஞ்சி விளையாடி பொழுதை கழித்து வந்த அபு, அதே ராஜ பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவர் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாம்புகளை எப்படி பிடிப்பது என்பதை அபு, அவரின் தந்தையிடம் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.