1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 மார்ச் 2018 (18:51 IST)

வங்கதேச அணியை பாம்பு டான்ஸ் ஆடி கலாய்த்த தமிழ் நடிகை!

வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 
நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
இந்த வெற்றியின் மூலம் இலங்கை-இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முன் நடந்த போட்டிகளில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி வீரர்கள் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை ரசிகர்களையும், வீரர்களையும் கடுப்பேத்தினார்கள்.
 
இந்நிலையில், நேற்று இந்திய அணி வங்கேதச அணியை வீழ்த்தி பாம்பு டான்ஸுக்கு முடிவு கட்டியது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பு டான்ஸ் ஆடி வங்கதேச வீரர்களை கலாய்ப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளது.